போக்குவரத்து நெரிசல் : வாகன போக்குவரத்து பாதிப்பு – வாகன ஓட்டிகள் பெரும் அவதி..!

2 Min Read

நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் உள்ள மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஐந்து கிலோ மீட்டருக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் வாகன போக்குவரத்து பாதிப்பு. வாகன ஓட்டிகள் பெரும் அவதி. வாகன ஓட்டிகள் இடையே கைகலப்பு.

- Advertisement -
Ad imageAd image

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதியில் கார்க்குடி என்ற இடத்திலிருந்து முதுமலை பகுதிக்கும் இடையே உள்ள இடைப்பட்ட பகுதியில், ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் வாகன நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். அரையாண்டு விடுமுறை, மற்றும் கிறிஸ்துமஸ், தொடர் விடுமுறையின் எதிரொலியாய் கேரளா, கர்நாடகா, தமிழக, பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளு குளு நீலகிரிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கேரளா, கர்நாடகா, பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், பெரும்பாலும் முதுமலை பகுதிக்கும் கூடலூர் பகுதிக்கும் வந்து செல்கின்றனர். கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஒரு பிரதான சாலையாக வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் சாலையாகவும் இந்த உதகை மைசூர் தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் பெரும் அவதி

இந்த நிலையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் முதுமலை வனப்பகுதியில் உள்ள கார்க்குடி என்னும் பகுதியில் இருந்து முதுமலை பகுதியில் இடைவெளியில் உள்ள மைசூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கும் மேலாக வாகன நெரிசல்கள் ஏற்பட்டு அனைத்து வாகன ஓட்டிகளும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளும் சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இப்பகுதியில் இரண்டு பாலங்கள் உடைக்கப்பட்டு, புதிய பாலங்கள் கட்டும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் தொடர் வாகன நெரிசல் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் அதனை வனத்துறையினரோ அல்லது காவல்துறையினரோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தாமல் கண்டு கொள்ளாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளே வாகனத்தில் இருந்து இறங்கி வாகன நெருசலை சரி செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் பெரும் அவதி

இதனை தொடர்ந்து ஒரு சில வாகன ஓட்டிகள் ஒருவருக்கொருவர் வாய் தகராறும் சில நேரங்களில் கைகலப்பும் ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே இப்பகுதியில் முதுமலை வனப்பகுதி என்பதால் வனத்துறையினரோ அல்லது காவல்துறையினரோ அதிக சுற்றுலா பயணிகள் வரும் நேரங்களில் வாகன ஓட்டிகள் நெரிசலை சரி செய்து தர வேண்டும் என்பதே அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

Share This Article

Leave a Reply