கணவனை கட்டிப்போட்டு சித்ரவதை – ஆண் உறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த கொடூர மனைவி கைது..!

2 Min Read

கணவருக்கு போதை மாத்திரை கலந்த பாலை கொடுத்து, அவரை கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

உத்தரபிரதேச மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனன் சைதி. இவர் மெஹர் ஜகான் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே, மெஹர் ஜகானுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கணவனை கட்டிப்போட்டு சித்ரவதை – ஆண் உறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த கொடூர மனைவி

இதுகுறித்து கணவர் மனன் சைதி மனைவியிடம் கேட்ட போது அவர் மழுப்பலாக பதிலை தெரிவித்துள்ளார். இதனிடையே அன்று இரவு சைதி தூங்குவதற்கு முன்பு அவருக்கு போதை மாத்திரை கலந்த பாலை மெஹர் ஜகான் கொடுத்துள்ளார்.

இதை அடுத்து அவர் மயங்கியதும் சைதியை அடித்து துன்புறுத்தியுள்ளார். பின்னர் சைதி போதை தெளிந்து பார்த்த போது அவரது ஆணுறுப்பு உள்பட அவரது உடலில் பல இடங்களில் காயம் இருந்துள்ளது. இதனை பார்த்து, அவர் மெஹர் ஜகானிடம் கேட்ட போது அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி மறைத்துள்ளார்.

கணவனை கட்டிப்போட்டு சித்ரவதை – ஆண் உறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த கொடூர மனைவி

இந்த நிலையில், தான் தாக்குதலுக்கு உள்ளானது எப்படி என்பதை அறிய, மனன் சைதி, தனது அறையில் ரகசிய கேமரா ஒன்றை வைத்துள்ளார். இதை அடுத்து கள்ளத்தொடர்பு குறித்து மனைவியிடம் மீண்டும் ஒருநாள் கேட்டுள்ளார். அப்போதும் மெஹர் ஜகான் மழுப்பலான பதிலையே கூறியுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் போதை மாத்திரை கலந்த பாலை சைதிக்கு கொடுத்து மெஹர் ஜகான் மீண்டும் தனது கைவரிசையை காட்டியுள்ளார். கணவன் போதையில் விழுந்ததும், அவரது கை, கால்களை கட்டிப் போட்டு, அடித்து துன்புறுத்தியதோடு, அவரது ஆணுறுப்பில் சிகரெட்டாலும் சூடு வைத்துள்ளார்.

கணவனை கட்டிப்போட்டு சித்ரவதை – ஆண் உறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த கொடூர மனைவி கைது

இந்த கொடூரம் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவாகியிருந்தது.

இதை அடுத்து, இந்த விஷயம் மனன் சைதிக்கு தெரிய வர அவர் கொடுத்த புகாரின் பேரில், மனைவி மெஹர் ஜகான் மீது கொலை முயற்சி, துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article

Leave a Reply