மணிப்பூர் கலவரமும் தக்காளி விலை உயர்வு….

2 Min Read
மணிப்பூர்

தலையங்கம்.

- Advertisement -
Ad imageAd image

மணிப்பூரில் தொடர்ந்து நாளுக்கு நாள் நிலமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே ஏற்பட்ட மோசமான மோதல்களால் மொத்தம் 150 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த இன கலவரத்தால் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வேண்டிய சூழ்நிலை நடந்து வருகிறது.

இந்த நிலையில் குக்கி இன பெண்கள் இருவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ள கொடூர செயலும் நடைபெற்றுள்ளது. இது பற்றி ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில் இந்திய அரசியல் தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். எதிர்க்கட்சிக்கு இணையாக ஆளுங்கட்சியும் அறிக்கை வெளியிடுகிற செயலில் தான் ஈடுபடுகிறது தவிர அங்கு நடைபெறும் இந்த கொடூர சம்பவங்களை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாகவே தெரியவில்லை.

பொதுமக்களும் இந்த செய்திகளை காதில் வாங்கிய படி கடந்து செல்லுகிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இயக்கங்கள் தான் இதற்காக போராட்டம் நடத்தி வருகிறது. இது அரசியலில் ஆரோக்கியமான செயல் அல்ல என்பதை அரசியல்வாதிகள் தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மணிப்பூரில் கலவரம் நிகழ்வது இப்போது மட்டுமல்ல கடந்த 2004 ஆம் ஆண்டு மணிப்பூரில் போதைப் பொருள் அச்சுறுத்தல், மனித உரிமை மீறல், ஆகிவையுடன் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து பெண்கள் ”இந்திய ராணுவமே எங்களை கற்பழியுங்கள்” என்னும் பதாகையை அணிந்து நிர்வாணமாக நின்ற செய்தியும் உண்டு. இன்னமும் ஆளும் அதிகாரவர்க்கும் வேடிக்கை பார்ப்பதை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு இப்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது. எப்போது அதற்கு விடை கிடைக்கும் என தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். தக்காளி காய்கறிகளில் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை நாம் அறிவோம். தக்காளி இல்லாமல் அன்றாடம் உணவு சமைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்கிற நிலையில் நம்முடைய வாழ்வு முறையை அமைத்துக் கொண்டுள்ளோம். அதற்கும் இப்போது ஆபத்து நேரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று பத்து ரூபாய்க்கு 100 கிராம் விற்பனை செய்யக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இது தற்காலிக விலையேற்றம் தான் என்று ஆட்சியாளர்கள் சொன்னாலும் கூட, தக்காளி உற்பத்தியாளர்கள் இன்னும் இது மூன்று மாதம் தொடரும் என்று சொல்லுகிறார்கள்.

தாங்கள் வாழ்கிற நாட்டில் உள்ள மக்களுக்கு என்ன தேவை, அவர்கள் பயன்படுத்துகிற பொருட்களின் உற்பத்தி சரியாக உள்ளதா, என்பதை எல்லாம் கண்காணிக்க வேண்டியவர்கள் ஆட்சியாளர்கள் தான். தக்காளி உற்பத்தியை, தோட்டக்கலைத் துறை கண்காணிக்காமல் போனது ஏன் இந்த கேள்வி எல்லோரும் போல நமக்கும் எழுகிறது. தக்காளியை மட்டும் தான் கண்காணிக்காமல் விட்டு விட்டார்களா இன்னும் எதையெதையெல்லாம் கண்காணிக்காமல் விட்டார்களோ ஆட்சியாளர்கள்..

ஜோதி நரசிம்மன்

ஆசிரியர்

Share This Article

Leave a Reply