நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாகவும், ரூ.5 முதல் 20 வரை கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி குறைந்தபட்சம் 5% வரை சுங்கச் சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதும்,

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திடீரென மார்ச் 31 ஆம் தேதி நள்ளிரவு, சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்வை ரத்து செய்து உத்தரவு வெளியிட்டது.
தேர்தல் நேரங்களில் பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைப்பது போன்ற தேர்தல் யுக்தி தான் இது என அப்போதே விமர்சனம் எழுந்தது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டால்,

அதன் தாக்கம் தேர்தலில் பிரதிபலிக்கலாம் என கருதி கடைசி நேரத்தில் சுங்கக் கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டது என்றும், இந்த கட்டண உயர்வு, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மீண்டும் அமலுக்கு வரலாம் என பல்வேறு கட்சித் தலைவர்கள் அப்போதே விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில், சரியாக 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாகவும், ரூ.5 முதல் 20 வரை கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
சுங்கக் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசுக்கு, லாரி உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.