மருத்துவமணை வளாகங்கள் தூய்மையாக இருந்தால் தான் நோய் பரவாமல் இருக்கும்.ஆனால் இங்கு மருத்துவமணையில் நிலமை வேறு மாதிரியாக இருக்கிறது.விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இரண்டு கழிவறைகள் உள்ளது. இந்த இரண்டு கழிவறைகளில் ஒன்று பிரேத பரிசோதனை அறை செல்லும் வழியில் உள்ளது. இந்த கழிவறை முற்றிலும் சேதம் அடைந்து பொதுமக்கள் உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இந்த கழிவறையில் கதவுகள் இல்லாததால் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் கழிவறையில் மலம் கழித்து விட்டு சென்று விடுகின்றனர்.
மட்டுமில்லாமல் அந்த கழிவறை உள்ளே தண்ணீர் விரயம் செய்து குழாய்களில் உள்ள தண்ணீரை திறந்து விட்டு செல்கின்றனர். இதனால் கழிவறை உள்ள அந்த இடம் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் சுற்றுப்புற சுவர்களின் ஓரமாக முட்புதற்கள் இருப்பதினால் அங்கேயும் மலம் கழித்துவிட்டு சிறுநீர் கழித்து விட்டு செல்கின்றனர். மற்றொரு கழிப்பிடம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நோயாளிகள் மற்றும் காத்திருப்போர் கூடம் எதிரே உள்ளது. இந்த கழிவறை நா. புகழேந்தி எம்.எல்.ஏ. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு 2022/ 2023 நிதியில் கட்டப்பட்டது.

ஆனால் புதியதாக தோற்றமளிக்கும். இந்த கழிவறையும் துர்நாற்றம் வீசுகிறது. சில சமூக விரோதிகள் இந்த கழிவறை உள்ளையே புகை பிடிப்பது, ஹான்ஸ் போன்றவைகளை உபயோகித்து விட்டு அந்த கவர்களை உள்ளே வைத்துவிட்டு செல்வது போன்ற செயல்களை செய்கின்றனர். இந்த கழிவறைக்குள்ளே உள்ள கதவில் தாழ்ப்பால் இல்லாமல் உள்ளது. இதனை சரி செய்யாமல் அப்படியே இந்த நிர்வாகம் விட்டு வைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது. அந்த கழிவறை உள்ளே சென்று வரும் பொதுமக்கள் கூறி செல்கின்றனர். மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் தன்னுடைய நோய் தொற்று தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இங்கே மருத்துவமனையில் நடக்கக்கூடிய இந்த செயலோ நோய் தொற்று இல்லாதவர்களுக்கு நோய் தொற்றை உருவாக்கி விடும் என்பதை உணராதது ஏன். கழிவறையை சரிவர பயன்படுத்தாத சில சமூக விரோதிகளும் இந்த கழிவறையை அசுத்தப்படுத்திவிட்டு செல்வதனால் இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களுடைய கோரிக்கை.
Leave a Reply
You must be logged in to post a comment.