- பொய்யான விவாகரத்து வழக்கை தாக்கல் செய்த கணவரிடம் இருந்து குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் மனைவி இழப்பீடு கோர முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனைவி துன்புறுத்தியதாகக் கூறி விவாகரத்து கோரி கணவர் தாக்கல் செய்த வழக்கை வேலூர் குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், பொய்யான தகவல்களை கூறி விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ததற்காக இழப்பீடு வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/the-price-of-flowers-peaked-today-in-thanjavur-on-the-occasion-of-saraswati-puja-and-ayuda-puja/
இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மனைவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ், குடும்ப நல நீதிமன்றமும், உரிமையியல் நீதிமன்றமும் நிவாரணம் வழங்கலாம் என்பதால் கீழமை நீதிமன்றம், மனைவிக்கான இழப்பீட்டை நிர்ணயிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply
You must be logged in to post a comment.