போக்சோ வழக்குகளை விரைவாக நடத்த திண்டுக்கல், தர்மபுரி, தேனி மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் .
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் மற்றும் புகார்களை விரைவாக விசாரிக்க மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இதன்படி தமிழகத்தில் தற்பொழுது வரை 16 மாவட்டங்களில் மட்டும்தான் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன.

எனினும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற செயல்கள் மற்றும் குற்ற வழக்குகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது .
இந்தசூழ்நிலையில் போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி போக்சோ வழக்குகளை விரைவாக நடத்த திண்டுக்கல், தர்மபுரி, தேனி மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசின் நீதித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.