TN Budget 2024: தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள்

2 Min Read

தமிழக சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதற்கான லோகோவை “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என்ற தலைப்பில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

1. சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.

3. தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.

5. ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

6.கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்

7. கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.

8. 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.356 கோடி, 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்யரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9. சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ரூ.500 கோடி, சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி, சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10. மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11. சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ரூ.430 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தவுள்ளது.

12. சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

13. நாமக்கல்லில் ரூ.358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

14. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்;

15. கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

Share This Article

Leave a Reply