சந்தனக்காடு தொலைக்காட்சி மூலம் மக்களிடம் நன்கு அறிமுகமானவர் இயக்குநர் கவுதமன்.தமிழ்த்திரை உலகில் மகிழ்ச்சி,போன்ற திரைப்படங்கள் மூலம் நன்கு அறிமுகமானவர் இயக்குநர் கவுதமன்.இயக்குநர் கவுதமன் இடையில் அரசியல் கட்சி ஒன்றை துவங்கி தேர்தலில் கூட போட்டியிட்டார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து தமிழக அரசியலில் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.இந்த நிலையில் மீண்டும் திரைத்துறை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளார்.மக்களிடையே வரவேற்பு எப்படி இருக்கும் என பின்பு தான் தெரியும்.
தற்போது வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் ஒரு மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார். அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் புதிதாக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தை ஜி.வி பிரகாஷ் இசையமைக்க “கவிப்பேரரசு” வைரமுத்து பாடல்கள் எழுத எஸ்.கோபிநாத் கேமராவை கையாள “ஸ்டண்ட்” சில்வா சண்டை காட்சியமைக்க தினேஷ் நடனம் அமைக்க பாலமுரளி வர்மன் வசனம் எழுத ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய நிகில் முருகன் மக்கள் தொடர்பை கவனிக்கிறார். என்று ஒரு வெளியீடு வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் முக்கிய படப்பிடுப்புகள் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல் கட்ட படபிடிப்பு நடத்திய நிலையில் விரைவில் “மாவீரா படையாண்டவன்” இரண்டாம் கட்ட படபிடிப்பினை தொடங்கவிருக்கிறது. ஸ்டண்ட் சில்வா அவர்கள் படத்தில் வரும் உக்கிரமான மாஃபியா கேங்குகளோடு கௌதமன் மோதவிருக்கும் மிக முக்கிய சண்டைக் காட்சிக்காக மாஸ்டரின் உதவியாளர் சிவாவை வைத்து தினமும் அதிகாலை மூன்று மணி நேரம் மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட மிக கடுமையான பயிற்சியினை அளித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படம் அனைத்துவித வயதினரும் கொண்டாடும்படி ஒரு அதிரடியான ஆக்க்ஷன் திரைப்படமாக வெளிவந்து தமிழ் திரையுலகில் “மாவீரா படையாண்டவன்” ஒரு மாபெரும் பேரதிர்வை ஏற்படுத்தும் என உறுதிபட சொல்கிறார் இயக்குனர் வ.கௌதமன்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் கவுதமன் திரைப் படம் இயக்குவது மிகுந்த எதிர்பார்ப்பை திரைத்துறையில் ஏர்படுத்தியுள்ளது.சந்தனக்காடு என்னும் தொடர் மக்கள் தொலைக்காட்சி வெளியிட்டதிலிருந்து மக்களிடையே கவுதம் அறிமுகம் இந்த திரைப்படத்திற்க்கு பக்க பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பார்க்கலாம் படம் எப்படி இருக்கிறது என்று.
Leave a Reply
You must be logged in to post a comment.