தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்க அன்புமணி கோரிக்கை.

1 Min Read
அன்புமணி ராமதாஸ்

12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்கிற அளவில் புதிய மாவட்டங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியிடப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

- Advertisement -
Ad imageAd image

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் திருவள்ளூர், சேலம், கோவை, மதுரை ஆகிய மாவட்டங்கள் உலகளவில் எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றும் தனி நாடாகவும் இருந்திருக்கும். திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் தொகை 27 லட்சத்தை கடந்து இருக்கக் கூடும்.நிலப்பரப்பின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக 6,188 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் இருந்து வருகிறது.

மாவட்ட வரைபடம்

இது சென்னையில் விட 15 மடங்கு அதிகமாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இணையான மக்கள் தொகை கொண்ட தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களும் பிரிக்கப்பட வேண்டும்.
12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்கிற அளவில் புதிய மாவட்டங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியிடப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடக்க இருப்பதாகவும் பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் மேலும் பல மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது பாமகவின் கோரிக்கையாக உள்ளது.

Share This Article

Leave a Reply