Tirupur – நாய் வளர்ப்பதில் தகராறு தம்பதி வெட்டி கொலை !

முதியோர் தம்பதியை கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற போது விபத்தில் சிக்கி குற்றவாளி ரமேஷ் மருத்துவமனையில் அனுமதி .

2 Min Read
பழனிச்சாமி-பருவதம்

திருப்பூர் :  அவிநாசி அருகே முதியோர் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

- Advertisement -
Ad imageAd image

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (82)  இவரது மனைவி பருவதம்(75). விவசாய தம்பதிகளான இவர்கள் , மகன், மகள் இருவரும் திருமணமாகிவிட்ட நிலையில்  தோட்டத்து வீட்டில் முதியோர் தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர் .

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை நீண்ட நேரமாகியும் முதியோர் தம்பதியர் வெளியே வராததால், சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் இருந்தவர்கள் தோட்டத்துக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது முதியோர் தம்பதியர் அடித்து படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .

உடனடியாக அவர்கள் முதியோர் தம்பதி கொலை குறித்து அவிநாசி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் . தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவிநாசி போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் , முதியோர் தம்பதி கொலைக்கு அவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரமேஷ் என்பவரே காரணம் என தெரிய வந்துள்ளது. ரமேஷ் வளர்த்து வந்த நாட்டுநாய் பழனிச்சாமியின் ஆடு , கோழிகளை கடித்து வந்ததால் ரமேஷ் மற்றும் முதியோர் தம்பதியினரிடையே அடிக்கடி வாய் சண்டை நடந்து வந்துள்ளது . இதனை தொடர்ந்தே தோட்டது வீட்டில் தனியாக இருந்த முதியோர் தம்பதியை ரமேஷ் கொலை செய்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது .குற்றவாளி ரமேஷை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

ரமேஷ் கைது செய்யப்பட்டது எப்படி :

முதியோர் தம்பதி பழனிச்சாமி மற்றும் பருவதம் கொலை செய்யப்பட்டதாக வந்த தகவலை அடுத்து சம்பவ பகுதிக்கு போலீசார் மோப்ப நாயுடன் சென்றுள்ளனர் . கொலை நடைபெற்ற இடத்தில தடயங்களை தேடும் பணியிலிருந்த மோப்ப நாய் ரமேஷ் வீட்டை சுற்றி சுற்றி குலைத்து வந்தது .

இருப்பினும் அந்த நேரத்தில் ரமேஷ் வீட்டில் இல்லை , போலீசார் விசாரணையில் ரமேஷ் சற்று முன்பு தான் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்தது . மருத்துவமனைக்கு விரைந்து ரமேஷிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் , “நான் பழனிச்சாமி மற்றும் பருவதத்தை கொலை செய்துவிட்டு தப்பிக்கும் போது தான் விபத்தில் சிக்கிக்கொண்டேன்”  என போலீசாரிடம் ஒப்புக்கொண்டார் . கொலைக்கு பயன்படுத்திய அருவாளை கைப்பற்றி குற்றவாளி ரமேஷ் மீது கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

சம்பவ இடத்தில மேற்குமண்டல IG தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

 

Share This Article

Leave a Reply