டாப்ஸ்லிப் ரோட்டில் காட்டெருமையை துரத்தும் புலி – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்..!

2 Min Read

பொள்ளாச்சி அடுத்த டாப்ஸ்லிப் வனப்பகுதியில் உணவுக்காக புலி ஒன்று காட்டெருமையை வேகமாக துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலினால் பல்வேறு பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வருகிறது.

- Advertisement -
Ad imageAd image
டாப்ஸ்லிப் ரோட்டில் காட்டெருமையை துரத்தும் புலி

இந்த நிலையில் வனப்பகுதிகளில் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாகவும் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி யானை, சிறுத்தை, கரடி, புலி மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளிலும், பழங்குடியின, மலைவாழ் மக்கள் வாழும் குடியிருப்புக்கு பகுதிகளிலும் அவ்வப்போது வந்து செல்கின்றன.

டாப்ஸ்லிப் ரோட்டில் காட்டெருமையை துரத்தும் புலி

இந்த நிலையில் பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து கன்னிமாரா தேக்கு பகுதிக்கு செல்லும் வழியில் புலி ஒன்று ஆக்ரோசமாக காட்டெருமையை துரத்தி உள்ளது.

இந்த காட்சியை அங்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமுக வளையத்தில் வைரல்

மேலும் தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் சுற்றுலாத்தலமான, பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது.

இந்த நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி யானைகள், புலி காட்டெருமை மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தென்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து பல்வேறு வீடியோ பதிவுகளை எடுத்து வருகின்றனர்.

வனத்துறையினர்

அப்போது வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகளிடம் ஆபத்தான முறையில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பதோ, வனவிலங்குகளை துன்புறுத்தவோ கூடாது எனவும்  அளித்து வருகின்றனர்.

மேலும் வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி வனவிலங்குகளை துன்புறுத்தி புகைப்படங்கள் எடுத்தால் வன உரிமைச் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Article

Leave a Reply