தொடர் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவர் , போலீசார் கைது செய்ய முயன்ற போது தப்பியோட்டம் . குற்றவாளியை போலீசார் கைது செய்ய முயற்சித்த போது குற்றவாளி சுமன் என்பவர் கீழே விழுந்து படுகாயம் .
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த கைதி சுமன் , போலீசார் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பியோட்டம் .
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் புகாரணத்தை தொடர்ந்து , தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு , தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களை போலீசார் தேடி வந்தனர் .

இந்நிலையில் வாகனசோதனையில் ஈடுபட்டுவந்த அம்மாப்பேட்டை தனிப்படை போலீசார் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சுமன் என்பவரை காவல்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
கைது செய்யும் போது தப்ப முயன்ற சுமன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் . மேலும் காயமடைந்த கைதியை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி சுமன் இன்று காலை தப்பியோடியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் அலட்சியமாக செயல்பட்ட தலைமை காவலர் மதுசூதனன், காவலர் கார்த்திகேயன், ஆயுதப்படை காவலர் பிரம்மா ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் உத்தரவு.
மேலும் தப்பியோடிய கைதி சுமனை கைது செய்ய அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் .
தொடர் திருட்டு வழக்கில் தொடர்புடைய கைதி காவல்துறையினரின் அலட்சியத்தால் தப்பியோடிய சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
Leave a Reply
You must be logged in to post a comment.