நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா அம்மா மகன் என மூன்று பேர் தூக்குப்போட்டு தற்கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் 36 கூலித்தொழிலாளியான இவர் திருமணமாகாத நிலையில் ஓட்டுனராக வேலை பார்த்து தற்போது உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் இருந்து வரும் அவரது தந்தை நடேசன் 65 தாயார் சிந்தாமணி 52 ஆகியோருடன் வசித்து வந்தார் நந்தகுமார் தந்தை நடேசன் தொடர்ந்து உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வந்துள்ளார். நந்தகுமார் தச்சு தொழில் செய்து பெற்றோரின் மருத்துவ செலவையும் உணவு தேவைகளையும் கவனித்து வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அவருக்கும் கையில் அடிபட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது வறுமையின் காரணமாக செலவுகளை சமாளிக்க அக்கம் பக்கத்தில் கடன் பெற்றுள்ளனர் இதே போல் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லோன் வாங்கியுள்ளனர் இவ்வாறு பல இடங்களில் வாங்கிய கடன் திருப்பி செலுத்த முடியாத நிலையில் நிலையில் மனம் உடைந்த மூன்று பேரும் ஒரே வீட்டிற்குள் தனித்தனியாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் யாரும் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது மூவரும் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு எழுச்சி பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பிரேதங்களை கைப்பற்றி ஆய்வு செய்தபோது தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் கடன் வாங்கிய நிலையில் அதனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தங்களது இளைய மகன் புதைக்கப்பட்ட இடத்தில் தங்களது உடல்களையும் புதைக்க வேண்டும் எனவும் எழுதி வைத்துவிட்டு இறந்திருப்பது தெரிய வந்தது இறந்து போன நடேசன் சிந்தாமணிக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர் இறந்து போன நந்தகுமார் மூத்த மகன் ஆவார் இரண்டாவது மகன் ஜெயபிரகாஷ் கடந்த சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதேபோல் இவர்களது ஒரே மகள் 15 வருடங்களுக்கு முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் கடைசி மகன் கோபி என்பவர் மட்டும் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் எலச்சிபாளையம் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணையை முடுக்கிவிட்டார்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை
Sign Up For Daily Newsletter
Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy.
Leave a Reply
You must be logged in to post a comment.