கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே கானூர் என்ற இடத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் செப்டிக் டேங்க் சென்டரிங் பிரிக்கும் போது வாயு தாக்கி உயிரிழப்பு.
வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி(40), கட்டிட மேஸ்திரி பாலசந்தர்(32), சக்திவேல்(25) ஆகிய மூவர் உயிரிழப்பு.
ஸ்ரீ முஷ்ணம் அருகே கானூர் மாஞ்சாலை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது இதற்காக சிமெண்ட் காங்கிரீட் போடும் பணி முடிவடைந்த நிலையில் சென்ட்ரிங் பலகைகளை பிரிக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த வீட்டின் உரிமையாளருடன் பணியாளர்கள் இருவரும் அந்த பணியில் ஈடுபட்டனர்.

பணியின் போது போது வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, கொத்தனார் பாலச்சந்திரன் மற்றும் சக்திவேல் ஆகியோர் திடீரென மூச்சு திணறி அவதிப்பட்டனர் அருகில் யாரும் இல்லாததால் இவர்களின் குரல் வெளியே கேட்கவில்லை நீண்ட நேரம் ஆன பிறகு சென்று பார்த்த போது மூச்சு திணறலுக்கு உட்பட்டு இவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது.
அதன் பின்னர் தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் 3 பேரின் உடல்கள் மீட்டு – போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 10 நிமிடங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.