பொன்னேரி அருகே வைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு சிவன் பார்வதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது . இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் .
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது . இக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் கடந்த மாதம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேகம் நிறைவடைந்த 48வது நாளான இன்று மண்டல அபிஷேகம் நடைபெற்றது .
இதன் ஒருபகுதியாக சிவபெருமான் பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் சார்பில் கைலாய வாத்தியம் முழங்க 21 வகையிலான சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் அக்னி ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதினர்.
இதனை தொடர்ந்து சிவபெருமானுக்கும் பார்வதி தாயாருக்கும் மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து கெட்டி மேளம் முழங்க சிவாச்சாரியார்கள் பார்வதி தேவிக்கு மங்கள நாண் சூட்டி திருக்கல்யாண வைபவத்தை வெகு விமரிசையாக நடத்தினர். இந்த நிகழ்வின் போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என பக்தி பரவசத்தில் முழக்கமிட்டனர்.
திருக்கல்யாண வைபோகத்திற்கு பிறகு மாப்பிள்ளை சிவபெருமானுக்கும் மணப்பெண் பார்வதி தாயாருக்கும் சிவாச்சாரியார்கள் மஹா தீபாராதனை செய்து பக்தர்களுக்கு திருக்கல்யாண தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.இவ்விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சிவபெருமான் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு வழிபட்டனர் .
கொஞ்சம் இதையும் படிங்க: http://thenewscollect.com/108-sangabhisheka-worship-at-vaidyanatha-swamy-temple-in-venpakakkam-near-tiruvallur-district/
Leave a Reply
You must be logged in to post a comment.