உணவகத்தில் மது அருந்தி விட்டு கலாட்டா செய்தவர்களை தாயும், தம்பியும் தட்டிக் கேட்கும் பொழுது தாயையும், தம்பியையும் தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள், தாயை தாக்கியதால் பட்டாகத்தியுடன் அங்கு வந்த அண்ணன் கைது. ஆறு பேர் மீது வழக்கு பதிவு.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் தாய் ஜெயா அவருடைய மகன் யோகேஷ் ஆகிய இருவரும் அந்த உணவகத்தை நடத்தி வருகிறார்கள்.

அந்த உணவகத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் 3 பேர் கடும் போதையில் வந்து சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் ரகளை செய்துள்ளார்கள். இதனை தாய் ஜெயாவும், ஜெயாவின் சிறிய மகன் யோகேஷும் தட்டிக் கேட்டுள்ளார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தாய் ஜெயாவையும் அவருடைய மகன் யோகாவையும் தாக்கியுள்ளார்கள். தாய் ஜெயாவும் அந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்களிடம் சண்டை போட்டுள்ளார்.

இந்த சண்டையில் ஓட்டுநர் சத்தியபாலன் என்பவரும் உணவகத்தை நடத்தி வரும் ஜெயா என்பவரும் ஜெயாவின் மகன் யோகேஷ் என்பவரும் காயமடைந்தார்கள். தாயையும், தம்பியையும் தனியார் பேருந்து நடத்துனர்கள் ஓட்டுநர்கள் தாக்குவது அறிந்த மூத்த மகன் விக்னேஷ் பட்டாகத்தியுடன் அங்கு வந்துள்ளார்.
தன் தாயும், தம்பியும் தாக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்து விக்னேஷ் அங்கு பட்டாகத்தியுடன் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பட்டாக்கத்தியுடன் வந்த விக்னேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சண்டையில் தொடர்புடைய தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் சத்தியபாலன், மணிகண்டன், ராஜேஷ் மற்றும் உணவகத்தை நடத்தி வரும் ஜெயா மற்றும் யோகேஷ்,
பட்டாக்கத்தியுடன் அங்கு வந்த ஜெயாவின் மூத்த மகன் விக்னேஷ் ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருவாரூர் நகர காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விட்டு தன் தாயையும், தம்பியையும் தாக்கியவர்களை பட்டாகத்தியுடன் வந்து தட்டி கேட்க முற்பட்ட விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.