திருவண்ணாமலை திமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சாவல் பூண்டி சுந்தரேசன் கார் மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை.

2 Min Read
தீ வைக்கப்பட்ட கார்

திமுகவின் தீவிர விசுவாசி, தலைமைக் கழக பேச்சாளர், கிளைக் கழக செயலாளராக கட்சிப் பணியில் தொடங்கி ஒன்றிய செயலாளர், மாவட்ட துணை செயலாளர் என தகுதியை வளர்த்துக் கொண்டவர் சாவல் பூண்டி சுந்தரேசன். கொரோனா காலகட்டங்களில் தற்போதைய அமைச்சரும் அப்போதைய திமுக மாவட்ட செயலாளருமான ஏ.வ வேலுவிற்கும் இவருக்குமான சில மனக்கசப்பு இரண்டு ஆடியோக்கள் மூலமாக வெளிவந்திருந்தது.

- Advertisement -
Ad imageAd image
சாவல் பூண்டி சுந்தரேசன்

அது தொடர்பாக சாவல் பூண்டி சுந்தரேசன் சில விளக்கங்களையும் வழங்கியிருந்தார். இந்த நிலையில் அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதிலிருந்து அவர் கட்சிப் பணிகளில் தொடர்பு இல்லாமல் செயல்பட்டு வந்தார்.
ஆனாலும் உள்ளூர் அமைச்சருக்கும் இவருக்குமான மனக்கசப்பு தொடர்ந்து கொண்டே தான் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று யாரோ சில மர்ம நபர்கள் சாவல் பூண்டி சுந்தரியேசன் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய காருக்கு தீ வைத்து விட்டு சென்றிருக்கின்றனர்.

காருக்கு தீ வைக்கும் காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. வீதிகளில் வரும் ஒருவர் தலையில் முக்காடு அணிந்து கொண்டு காரின் மீது பெட்ரோல் ஊத்துகிற காட்சிகளும், அதன் பின்னர் தீ வைக்கிற காட்சிகளும் பதிவாகி இருக்கின்றன. இது தொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் தீ வைக்கும் மர்ம நபரை விரைவில் போலீசார் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முரசொலியின் கவிஞர், திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர், மு க ஸ்டாலின் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அவருடனே சென்று பிரச்சார பீரங்கியாக செயல்பட்டு வந்தவர் சாவல் பூண்டி சுந்தரேசன். கட்சியிலிருந்து அவரை நீக்கினாலும் தொடர்ந்து அவர் திமுகவின் கொள்கையோடு தான் செயல்பட்டு வருவதாக அந்த பகுதியில் உள்ள திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

காருக்கு தீ வைக்கும் மர்ம நபர்
அங்கிருந்து கைப்பற்றப்பட்ட பாட்டில்

இந்த நிலையில் பழி வாங்கும் நோக்கத்தோடு இந்த கார் தீவைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த செயல் கொண்டு செல்லப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள் என்று சுந்தரேசன் தரப்பு நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
போலீசாரின் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share This Article

Leave a Reply