ஆர்.என்.ரவி மீண்டும் கிளப்பிய திருவள்ளுவர் காவி உடை சர்ச்சை

2 Min Read
அழைப்பிதழ்

திருவள்ளுவர் திருநாள் விழா

- Advertisement -
Ad imageAd image

நேற்று ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில், “திருவள்ளுவர் திருநாள் விழா” நடைபெறும் என ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அழைப்பிதழ் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் விவாத்தை கிளப்புவதாக அமைந்துள்ளது. தமிழக ஆளுநருக்கு ஆளும் திமுக அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக திராவிட மாடல் என்பது காலாவாதியான கொள்கை என்ற விமர்சனத்தில் தொடங்கி திமுகவை சீண்டும் வகையில் ஆளுநர் ஆர் என் ரவி பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். ஆளுநரின் இந்த செயல்பாடுகளுக்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் ரவி

இவ்வாறாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு.. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து உள்ளது. இவ்வாறாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், ஆளுநர் ரவி, ஆர் எஸ் எஸ் ரவி போல செயல்படுவதாக திமுக காட்டமாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் அரசியல் ரீதியாக விமர்சனங்களை எழுப்பியிருந்த நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளப்பின. இந்த நிலையில், தற்போது மீண்டும் அத்தகைய சர்ச்சை எழுந்துள்ளது.

ஆளுநர் ரவி

காவி உடையில் திருவள்ளுவர்

அதாவது, நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் “திருவள்ளுவர் திருநாள் விழா” நடைபெறும் என ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அழைப்பிதழ் ஒன்று வெளியானது. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் இந்த அழைப்பிதழ் வெளியானது. இந்த அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்புவதாக அமைந்துள்ளது. தமிழக அரசு பயன்படுத்தும் படங்களில் திருவள்ளுவர் வெள்ளை நிற ஆடை அணிந்தவாறு இடம் பெற்று இருக்கும். ஆனால், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் காவி நிற உடையோடு திருவள்ளுவர் படத்தை அச்சிட்டு வெளியிட்டு வருகிறார்கள். இந்த சூழலில்தான், காவி உடையில் திருவள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருப்பது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு தமிழக அரசால் வைக்கப்படுகிறது.

 

Share This Article

Leave a Reply