திருவள்ளுவர் தான் கலைஞர். கலைஞர் தான் திருவள்ளுவர் -வைகோ.

2 Min Read
வைகோ

சென்னை புளியந்தோப்பு பிண்ணி மில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ திருக்குறளையும் கலைஞரையும் பிரித்துப் பார்க்க முடியாது. திருவள்ளுவர் தான் கலைஞர். கலைஞர் தான் திருவள்ளுவர் என புகழாரம் சூட்டினார்.

- Advertisement -
Ad imageAd image

பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப் பெற்றவர் கலைஞர் பெரியார் தன்னுடைய வாழ்நாளில் எத்தனையோ விழாக்களை எடுத்தாலும் 1948 ஆம் ஆண்டு திருக்குறளுக்கு விழா எடுத்தார் அந்த விழாவில் பட்டுக்கோட்டை அழகிரி சாமியை கொண்டு தாளமுத்து நடராஜன் சிலையை திறக்க வைத்தார் அவர் 1949 ஆம் ஆண்டு திருக்குறள் மாநாட்டை நடத்தினார் தன்னுடைய நெஞ்சில் ஆழப் பதிந்துள்ள காரணத்தால் கலைஞர் தன்னுடைய 14 வயதில் வாருங்கள் தோழர்களே வந்து இந்தி பேய் அடித்து விரட்டுவோம் என்று எழுதி போர்க்களத்தில் நுழைந்தார்.

கலைஞர் அமைத்த வள்ளுவர் கோட்டத்தின் உயரம் 128 அடி அதை அமைத்து திறப்பதற்கு நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போதுதான் ஆட்சி கலைக்கப்பட்டது. குறளோவியத்தை தீட்டியவர் கார் 13 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டத்தை கடந்து தான் செல்லும் ஆனால் ஒரு முறை கூட வள்ளுவர் கோட்டத்திற்கு கால் எடுத்து வைக்கவில்லை. திமுகவினர் வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரே அண்ணாவிற்கு சிலை எழுப்பினார்கள் அந்த சிலையை திறந்து வைக்கும் போது வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞரால் இந்த சிலையை திறந்து வைக்கப்படுகிறது என்று எழுதினார்கள். மூன்று கடல் சந்திக்கும் குமரியில் வள்ளுவருக்கு சிலை எழுப்பினார். திருவள்ளுவர் தான் கலைஞர். கலைஞர் தான் திருவள்ளுவர். பெரிய அலை அடித்தால் சிலை பாதிக்கப்படுமோ என்று கேட்டார் அதற்கு அந்த சிற்பி அலையையும் மழையையும் கூட அசைக்கலாம் நான் கட்டிய சிலை அசையாது என்றார். அதேபோன்று புயல் வந்த போது அசையவே இல்லை அது புவி உள்ள அளவும் இருக்கும். பூமி உள்ள அளவும் தமிழ் இருக்கும். பூவுலகம் இருக்கும் வரை தமிழ் இருக்கும். தமிழ் இருக்கும் வரை திருக்குறள் இருக்கும். திருக்குறள் இருக்கும் வரை நாயகன் கலைஞர்கள் இருப்பார் என்று பேசினார்.

Share This Article

Leave a Reply