மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கான புதிய பேட்டரி கார் திருத்தணி முருகன் கோயில்.

2 Min Read
திருத்தணி முருகன் கோயில்

தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆன்மிக தளங்களுக்கு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது.அந்த வகையில் அமைச்சர் சேகர் பாபு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை அறிந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

அந்த வகையில் திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு அமைச்சர்கள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.திருவிழாவை முன்னிட்டு  கூடுதல் பேருந்துகள் மின்சார  ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டது.

ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில் வரும் ஒன்பதாம் தேதி முதல் ஐந்து நாட்கள் ஆடிக்கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை  அமைச்சர் ஆர் காந்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ்  ஆகியோர் தலைமையில் திருத்தணி முருகன் கோயிலில் ஆய்வுக்கூட்டமானது நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கூடுதல் மருத்துவ வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது,மேலும் திருவிழாவிற்க்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்,தங்கும் வசதிகள் என விவாதிக்கப்பட்டது.மேலும் வயதான மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பக்தர்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலை உள்ளதால் வழக்கத்தை மாறாக கூடுதல் போக்குவரத்து சேவைகளையும், மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கிடவும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட துறை சார்ந்த அலுவலகர்களிடம்  அமைச்சர் ஆலோசனை செய்தார்..

பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என அமைச்சர்கள் அறிவுறுத்தினர் இதனை தொடர்ந்து அன்னதானம் கூடம் ஆய்வு செய்தும், மாற்றுத்திறனாளிகள் மற்றும்  வயதானவர்களுக்கான புதிய  பேட்டரி கார் வாகனத்தை அமைச்சர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த ஆண்டு நடைபெறும் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடை பெற மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

Share This Article

Leave a Reply