ஜி – ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான 50இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி ஒத்தக்கடை டேப் ( TAB) காம்ப்ளக்ஸில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வந்தனர் – அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதால் அதிகாரிகள் காத்திருந்தனர். அப்போது
அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரிடம் தொலைபேசி மூலம் எப்போது திறக்கப்படும் என விசாரித்தனர்.
அப்போது ஊழியர் ஒருவர் வந்து கதவை திறப்பதை கண்ட உடன் அதிகாரிகள் உடனடியாக அவரை விசாரித்தனர். பின்னர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று ஆவணங்களை பார்த்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவனைக்காவில் அடுத்துள்ள கொண்டையம்பேட்டை பகுதியில் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடமும், திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள பிளாட்டுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.