- கனமழையால் நெற்பயிர் விவசாயம் பாதிப்பு பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து பேருந்து சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் அழுகி வீணாகிப் போனது இதில் ஒரு சிலருக்கு மட்டுமே பயிர் காப்பீடு தொகை வழங்கிய நிலையில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை முழுமையாக கிடைக்காத நிலையில் மெதூர் கிராமத்தில் விவசாய நெற்பயிர்களுக்கு உரிய பயிர் காப்பீடு தொகை வழங்காததை
கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்அரசு பேருந்தை சிறைபிடித்து பொன்னேரி பழவேற்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோளூர் இலுப்பாக்கம் மெதூர் விடத்தண்டலம்
திருப்பாலைவனம் அண்ணாமலை சேரி
உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரிய காப்பீடு தொகை வழங்காவிடில் ஆங்காங்கே இனி தொடர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தங்களுக்கு காப்பீடு தொகை கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது எனவும் கட்சி பேதம் இன்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.