நான் மாநிலத் தலைவராக இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது – அண்ணாமலை கடும் தாக்கு..!

2 Min Read

எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் உட்கட்சி பிரச்சினை இருப்பதாக தெரிவித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மாநிலத் தலைவராக நான் இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை, எல்.முருகன் இருந்த போது அதிமுக, பாஜக கூட்டணி நன்றாகத்தான் இருந்தது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதிமுக, பாஜக கூட்டணி பிரிந்ததே அண்ணாமலை அதிகம் பேசியதால் தான் இவ்வாறு தெரிவித்தார். இதை அடுத்து கோவை விமான நிலையத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள அண்ணாமலை;-

எடப்பாடி பழனிசாமி, வேலுமணிக்கு இடையே உட்கட்சி பிரச்னை இருப்பது போல் தெரிகிறது. தனித்து ஒரு இடம் கூட வாங்க முடியாத அதிமுக, எப்படி பாஜகவுடன் கூட்டணி வைத்து 35 இடம் வாங்க முடியும்.

அதிமுக

பாஜக பெற்ற வாக்கு எண்ணிக்கை குறித்து வேலுமணி தவறான தகவலை தந்துள்ளார். வேலுமணி தன்னுடைய அரசியல் அறிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கோயம்புத்தூர் மக்கள் அதிமுகவை முற்றிலும் நிராகரித்து விட்டனர்.

சந்தர்ப்பவாத அரசியல் செய்து வரும் அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தான் தேர்தல் தரும் பாடம். ஆளும் கட்சியாக இருக்கும் போதே அதிமுக தனியாக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை.

பாஜக

பாஜக மாநில தலைவராக நான் இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக மாநில தலைவராக வேறு ஒருவரை கொண்டு வந்தால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியும்.

அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம். கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள். நான் கோவையில் தான் இருக்கப் போகிறேன் இவ்வாறு பேசினார். அதை தொடர்ந்து, கோவையில் வேட்பாளராக வாக்கு எண்ணும் மையத்திற்கு வராதது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை,

நான் மாநிலத் தலைவராக இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது – அண்ணாமலை

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பொதுமக்கள் இருக்கிறார்களா? மக்களை உள்ளே விடுகிறார்களா? மக்களை எங்கே சந்திக்க வேண்டுமோ அங்கே சந்திக்கிறேன் என்றார்.

Share This Article

Leave a Reply