போக்குவரத்து கொள்கையில் மாற்றம் வேண்டும்….

2 Min Read
நடத்துநர்

தலையங்கம்…

- Advertisement -
Ad imageAd image

தமிழக அரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு எளிய முறையில் அவர்கள் பயணம் செய்ய ஏதுவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால் அது அதன் நோக்கத்தை இழந்து வெகு நாட்களாகிறது.
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால் நீண்ட தூரம் பயணிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் அரசு பேருந்துகளை நாடி வருகின்றனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் அதிகம் வாழும் தமிழ்நாட்டில் இதுதான் நிலை.

இந்த நிலைக்கு இப்போது ஒரு ஆபத்தை ஏறப்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.மகளிர்க்கு நகரப் பேருந்துகளில் இலவச பயண அனுமதி வழங்கியிருக்கும் நிலையில், மகளிருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது தற்போதைய போக்குவரத்துக் கொள்கை.ஆம் அதுதான் நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம். குறிப்பாக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு, சென்னையிலிருந்து விழுப்புரத்திற்கும் பயணம் செய்கிற பொழுது விழுப்புரம் பேருந்து நிலையத்திலோ, கோயம்பேடு பேருந்து நிலையத்திலோ நடத்துநர் அனைவருக்கும் பயணச்சீட்டு வழங்குகிறார். இடையில் மேல்மருவத்தூர், திண்டிவனம், செங்கல்பட்டு, மதுராந்தகம் என எந்த ஊரிலும் இந்த பேருந்து நிற்காது.


இது போன்ற ஊர்களில் அவசரமாக செல்ல வேண்டிய பயணிகள் எப்படி செல்வார்கள். இந்த பேருந்துகளில் வழியில் இறங்கவோ ஏறவும் முடியாத நிலை தான் இருக்கிறது. ஒரு சில பேருந்துகளில் இப்படி என்றால் கூட பரவாயில்லை பெரும்பாலும் பேருந்துகளில் இதே நிலைதான் இருக்கிறது இதனால் பாதிக்கப்படுவதும் சிரமப்படுவதும் பொதுமக்கள் தான்.
இது தொடர்பாக போக்குவரத்து கழக நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டால் ஆட்கள் பற்றாக்குறை என்று சொல்லுகிறார்கள். அதுவும் வாய் வழியாக தான் எழுத்து வழியாக அல்ல. இதே நிலை நீடிக்குமே ஆனால் மக்கள் வெவ்வேறு போராட்டங்களை தொடர வேண்டிய அவசியம் ஏற்படும். அவை வெகு விரைவில் பேருந்து நிலையங்களிலே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது போன்ற தகவல்களை தமிழ்நாடு அரசின் தலைமைக்கு யார் தெரிவிப்பது இவை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. மக்களுக்கு சேவையாற்றும் அரசு என்று சொல்லிவிட்டு மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது.
அரசு பேருந்துகள் சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கு என்று தனி கவனம் செலுத்திய அரசு. இதுபோன்ற நடத்துநர் இல்லாமல் பயணிக்கும் பேருந்துகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் அதுவெல்லாம் தேர்தலில் ஓட்டாக எதிரொலிக்கும் என்பது நம்முடைய கருத்து.


இப்படி ஒரு நிலை இருப்பது தெரிந்தும் கூட பொதுமக்களும், அரசியல்வாதிகளும் இதை பற்றி பேசுவது கூட கிடையாது. தற்போது உள்ள அவசர உலகத்தில் இதை கண்டுகொள்ளாமல் இவர்கள் கடந்து போகிறார்கள் என்று தான் உண்மை. இனியாவது தமிழ்நாடு அரசு. நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜோதி நரசிம்மன்

ஆசிரியர்

Share This Article

Leave a Reply