கேரளாவில் புதிய வகை கொரோனா அச்சம் அடைய தேவையில்லை – சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ்..!

2 Min Read

கேரளாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறினார்.

- Advertisement -
Ad imageAd image

. கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் முக கவசம் அணியும்படி, மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில் புதிதாக உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கேரளா மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பத்தனம் திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியிருப்பதாவது;

கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்

புதிய வகை கொரோனா குறித்து கேரளா மக்கள் கவலைப்பட தேவையில்லை. இது இப்போது தான் இங்கு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பே சிங்கப்பூர் விமான நிலையத்தில் சில இந்தியர்களிடம் காணப்பட்டது. கேரளாவில் மரபணு வரிசைப்படுத்தல், பரிசோதனை மூலம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த புதிய வகை கொரோனா இருக்கிறது. இது பற்றி கவலைப்பட வேண்டாம். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நமது சுகாதார கட்டமைப்பு பலமாக உள்ளது. அதே சமயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது.

கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்

நேற்று முன்திரம் 339 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 335 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை புறநானால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் எண்ணிக்கை 4 கோடியை 5 லட்சத்து 4816 ஆக உயர்ந்தது. இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 69 ஆயிரத்து 799 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இருப்பவர்கள் எண்ணிக்கை 1492 இல் இருந்து 1701 ஆக உயர்ந்தது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள். அதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 316 ஆக அதிகரித்தது. அவரின் மாதிரிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டதில், ஜெஎன்.1 வகை தொற்று கடந்த டிச.8-ஆம் தேதி கண்டறியப்பட்டது.

நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 90 சதவீதம் மிதமானதாகவே உள்ளது. இதற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே போதுமானது. கேரளப் பெண்ணுக்கு ‘ஜெஎன்.1′ தொற்று உறுதியான நிலையில், நாட்டில் வேறெங்கும் இப்புதிய வகை பாதிப்பு கண்டறியப்படவில்லை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Share This Article

Leave a Reply