தமிழகத்தில் ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது – ஜி.கே வாசன்..!

2 Min Read
ஜி.கே வாசன்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு கருக்கா வினோத என்கிற நபர் பெட்ரோல் வெடி குண்டு வீசிய சம்பவம் நடந்தது அதை தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.இந்த சூழலில் தமிழகத்தில் ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் பேட்டி.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாட்டில் ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்தார். குடியரசு தலைவர் சென்னை வரக்கூடிய சில மணி நேரங்களில் அதுவும் அவர் தங்கக்கூடிய இடத்தில் பெட்ரோல் தாக்குதல் நடைபெற்றுள்ளதால் சாதாரண மனிதர்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும். என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஜி.கே வாசன்

இந்த சம்பவத்தால் தமிழக உளவுத்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளதால் தான், ஆளுநர் மாளிகை மீது இப்படி ஒரு தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கூறியவர். மக்களின் அச்ச உணர்வை போக்கும் வகையில் சட்ட ஒழுங்கை சீர் செய்வது தமிழக அரசின் கடமை என்றார். மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்.அந்த கடமை அரசுக்கு உண்டு. இந்த சம்பவத்தை ஆழமாக விசாரிக்க வேண்டும். அந்த நோக்கம் என்ன வேன்று மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டியது அரசின் கடமை. ராஜீவ்காந்தி ராஜ் பவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பின்புலம் குறித்து விரிவான விசாரணை தமிழக அரசு நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஜி.கே வாசன்

நீட் தேர்வில் ஏழை எளிய மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் கணிசமாக மருத்துவ படிப்பில் வெற்றி பெற்ற சேர்ந்து இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட ஜி.கே வாசன், ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தினம் தோறும் சென்று திமுக நடத்தும் கையெழுத்து வேட்டை மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்பம் செயலாக உள்ளது என்றார். தமிழக அரசு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றால், அதனை திமுக சட்டபூர்வமாக கையில் எடுக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அரசியல் நோக்கத்தில் மக்களை திசை திருப்ப முயன்ற திமுக பல விளையாட்டுகளை கையில் எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கொடி மரங்களை அப்புறப்படுத்துவதால் மட்டும் திமுக கொடி பறந்து விடாது.

 

Share This Article

Leave a Reply