கள்ள காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி..!

2 Min Read

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே மேல வன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாமல்லன் வயது (45). இவர் அருகில் உள்ள மேலநெடும்பூர் கிராமத்தில் குடிநீர் டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு நாகலட்சுமி என்பவரோடு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்து வருகின்றனர். அமைதியாகப் போய்க் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பருடன் பழக்கம் ஏற்படுகிறது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

- Advertisement -
Ad imageAd image
மனைவி

வெளிநாட்டில் வேலை செய்து வரும் தங்கப்பாண்டியன் அவ்வப்போது கிராமத்திற்கு வந்து செல்வார். அப்போது நாகலட்சுமிக்கும், தங்க பாண்டியனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த மாமல்லன் குடும்பத்தின் கௌரவம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மனைவி நாகலட்சுமியை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதலை மனைவி நாகலட்சுமி கைவிடுவதாக இல்லை. கணவனுக்கு தெரியாமல் வெளிநாட்டில் ஓட்டுனராக இருக்கும் தங்க பாண்டியனிடம் ஆடியோ கால் மற்றும் வீடியோ காலில் எல்லாம் பேசி வந்தார். சரி உள்ளூரில் இருந்தால் தான் மனைவி நாகலட்சுமி இப்படி இருக்கிறார் என்று முடிவு செய்த மாமல்லன் குடும்பத்தோடு அருகில் உள்ள சிதம்பரம் நகரத்திற்கு குடி பெயருகிறார். பிள்ளைகளை அங்கேயே படிக்க வைத்து விட்டு சிதம்பரத்திலிருந்து தினமும் தான் வேலை செய்யும் டேங்க் ஆபரேட்டர் பணிக்கு வருகிறார்.

கள்ளக்காதலன்

இந்நிலையில் இவர் கடந்த 19ஆம் தேதி வேலைக்கு வந்த போது மர்மமான முறையில் தலையில் கடுமையான ரத்த காயங்களுடன் மேல வன்னியூர் கிராமத்தில் சாலையோரம் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்த நிலையில் மாமல்லன் இறப்பிற்கு மனைவி நாகலட்சுமியின் கள்ளக்காதல் தான் காரணம் என அறிந்தனர். பின்னர் நாகலட்சுமியை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது அவருக்கும் அதே ஊரில் வசித்து வரும் தங்கபாண்டியன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததும் இதனை அடிக்கடி கணவர் மாமல்லன் தட்டி கேட்கவே வேறு வழி இல்லாமல் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்தார். கொலை நடைபெற்ற விதம் குறித்தும் போலீசாரிடம் அவர் தெரிவிக்கும் போது தற்போது தங்கபாண்டியன் வெளிநாட்டில் இருந்து வருகிறார்.

கள்ள்க்காதலன் நண்பர்கள் இளவேந்தன், ராஜகுரு

இந்நிலையில் கள்ளக்காதலை மாமல்லன் அடிக்கடி தட்டி கேட்கவே ஆத்திரமடைந்த நாகலட்சுமி வெளிநாட்டில் இருக்கும் கள்ளக்காதலன் தங்கபாண்டியனிடம் முறையிட தங்கபாண்டியன் தனது நண்பர்களான காட்டுமன்னார்கோவில் பகுதி கண்டமங்கலம் குமலன்காட்டு பகுதி சேர்ந்த சேர்ந்த ராஜகுரு, இளவேந்தன் ஆகியோரை வைத்து வேலைக்கு வந்த மாமல்லனை தலையில் அடித்து கொலை செய்து விட்டு அதை விபத்து போல செட்டப் செய்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் இது தொடர்பாக கள்ளக்காதலி நாகலட்சுமி, கொலை செய்த ராஜகுரு, இளவேந்தன் ஆகிய மூன்று பேரையும் குமராட்சி போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் இருக்கும் தங்கபாண்டியனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article

Leave a Reply