நிறுத்தாமல் சென்ற வாகனம் – துரத்தி பிடித்த தேர்தல் பறக்கும் படையினர்..!

2 Min Read
நிறுத்தாமல் சென்ற வாகனம் - துரத்தி பிடித்த தேர்தல் பறக்கும் படையினர்

நிறுத்தாமல் சென்ற வாகனத்தை துரத்தி பிடித்து, 3 கோடி ரூபாயை பறிமுதல், செய்து தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்டம், பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, தனியாருக்கு சொந்தமான ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனம் அந்த வழியாக வந்துள்ளது.

நிறுத்தாமல் சென்ற வாகனம்

இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றதால், சந்தேகமடைந்த அதிகாரிகள், அந்த வாகனத்தை துரத்தி பிடிக்க முயற்சி செய்தனர்.

மேலும் பேரூர் தாசில்தார் அலுவலகம் அருகே, மடக்கி பிடித்த அதிகாரிகள் அந்த வாகனத்தை சோதனை செய்ததில் மூன்றரை கோடி ரூபாய் பணப்பெட்டியை பறிமுதல் செய்தனர்.

நிறுத்தாமல் சென்ற வாகனம் – துரத்தி பிடித்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

மேலும், அந்த வாகனத்தில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மூன்றரை கோடி ரூபாய் பணப்பெட்டி வாகனத்தில் இருந்தது தெரியவந்தது. மேலும், இந்த பணத்தை அந்த பகுதியில் உள்ள ஏடிஎம்களில் நிரப்புவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

நிறுத்தாமல் சென்ற வாகனத்தை துரத்தி பிடித்து, 3 கோடி ரூபாயை பறிமுதல், செய்த தேர்தல் பறக்கும் படையினர்

பின்னர் ஏடிஎம்மில் பணம் நிரப்பப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும், மாலை 6 மணிக்கு மேல் கணபதியில் உள்ள அலுவலகத்திற்கு செல்லக்கூடிய வாகனம் தெலுங்குபாளையம் பகுதியில் உலா வந்தது குறித்தும் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிறுத்தாமல் சென்ற வாகனத்தை துரத்தி பிடித்து, 3 கோடி ரூபாயை பறிமுதல், செய்து தேர்தல் பறக்கும் படையினர்

மேலும் பறக்கும் படை அதிகாரிகள் அப்போது வாகனத்தை நிறுத்த சொன்ன போது, ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக கொண்டு வநதிருந்தால் நிறுத்தி இருப்பார்கள்.

ஆனால், அதிகாரிகளை கண்டதும் நிற்காமல் வாகனம் சென்றது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கொண்டு வந்தார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply