ஒன்றிய அரசு தமிழகத்திற்கு விரோத அரசாக செயல்படுகிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா பேசியதாவது;-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக வேட்பாளர் தோல்வி பெற வேண்டும் என்றும், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு விரோத அரசாக செயல்படுவதாகவும், பொருளாதாரத்தில் நலிவடைந்த நாட்டில் மட்டும் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை,

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாதில் மிகப்பெரிய சதி பாஜக அரசால் இருப்பதாக தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒன்றிய அரசு கொடுங்கோன்மை அரசாக உள்ளதாகவும், குற்றவியல் சட்டங்கள் சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும்,
மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுவிலக்கு கொண்டு வர வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தபடுவதாகவும், போதையில்லா தமிழகத்தை கொண்டு வர பரிபூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.

எந்த தீவிரவாத செயலும் ஏற்புடையதல்ல தேசிய புலனாய்வு முகமை சிறுபான்மை மக்கள் மீது மட்டுமே விசாரனை செய்து வருவதாகவும், மிகபெரிய பரபரப்பினை ஏற்படுத்தி அப்பாவிகளை கைது செய்து,

அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செயலை தான் செய்வதாக குற்றஞ்சாட்டினார்.
மாநிலங்களின் உரிமைகளில் தலையீட கூடிய செயலில் தான் என்.ஐ.ஏ செயல் இருப்பதால் அதனை கலைக்கப்பட வேண்டுமெனவும்,
இந்திய குடியுரிமை சட்டதிருத்த சட்டத்திற்கான அலுவலகம் தபால் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது அகற்ற பட வேண்டுமென கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.