கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சில நாட்களாக புலி நடமாட்டம் இருந்து வந்த நிலையில், வயநாடு மாவட்டம் கெனிச்சிரா பகுதியில் வளர்ப்பு விலங்குகளை புலி கொன்றுள்ளது. ஒரு கிராமத்தையே பயமுறுத்திய புலி சாபு என்பவரது வீட்டில் வனத்துறையினர் அமைத்த கூண்டில் சிக்கியது.

இரவில் புலி மாடுகள் கொல்லப்பட்ட வீட்டின் தொழுவத்திற்கு மீண்டும் வந்த நிலையில் கூண்டில் சிக்கியது. சாபு என்பவரின் வீட்டில் உள்ள 1 பசுவை கொன்று விட்டு, பின்னர் பென்னியின் வீட்டில் உள்ள தொழுவத்தில் நின்ற 2 பசுக்களை கொன்றுள்ளது.

பின்னர் பசுக்களை கொன்று விட்டு, தொழுவத்திற்கு இரவில் புலி மீண்டும் வந்ததுள்ளது. மழை பெய்த நேரத்தில் மாட்டு தொழுவத்தில் புலி வந்த காட்சிகளை குடும்பத்தினர் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
வனத்துறையினர் சாபு என்பவரின் வீட்டில் கூண்டு வைத்துள்ளனர். அதில் புலி கொன்ற போட்ட பசுவின் உடலை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் இரவில் சாபு என்பவரின் வீட்டில் உள்ள தொழுவத்தில் வந்த புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் ஞாயிற்றுக்கிழமை ( 23.06.2024 ) நேற்று இரவு சுமார் 11.05 மணி அளவில் கூண்டில் சிக்கியது.
Leave a Reply
You must be logged in to post a comment.