தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை பட்டமளிப்பு விழா கரிகாற்சோழன் அரங்கத்தில் தமிழ்நாடு தர ஆளுநர் ஆர் என்வி தலைமையில் நடக்கிறது.!

2 Min Read
  • தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை பட்டமளிப்பு விழா கரிகாற்சோழன் அரங்கத்தில் தமிழ்நாடு தர ஆளுநர் ஆர் என்வி தலைமையில் நடக்கிறது. இதில் 656 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.

தமிழ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் 14 ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். பல்லைக்கழக இணைவேந்தர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இதில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பஞ்சநதம் சிறப்புரையாற்றுகிறார்.

- Advertisement -
Ad imageAd image

பட்டமளிப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழகப் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டு ஏறத்தாழ 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெறும் 14வது பட்டமளிப்பு விழா பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

மொத்தம் 656 மாணவர்கள் இப்பட்டமளிப்பு விழாவில் பட்டங்களைப் பெறுகின்றனர். இவர்களில் முனைவர் பட்ட ஆய்வாளர்களின் எண்ணிக்கை 100, ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை 76, பல்கலைக்கழகத்தில் உள்ள வெவ்வேறு துறைகளில் முதுகலைப்பட்டம் பயின்ற 212 மாணவர்களும், 190 மாணவர்கள் இளங்கல்வியியல பட்டத்தையும், வெவ்வேறு பாடப்பிரிவுகளில் 68 மாணவர்கள் இளங்கலைப்பட்டமும், பிற பட்டங்களையும் பெற உள்ளனர்.பல்கலைக்கழகம் வடிவமைத்து நடத்திய பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் மூலமாகவும் மாணாக்கர்களின் கடின முயற்சியினாலும் பெறப்படும் இப்பட்டமளிப்பு விழாவில், நாடறிந்த கல்வியாளரும், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விழா சிறப்புரையாற்ற உள்ளது சிறப்பான ஒன்றாகும்.

தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவனால் 2022 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட “மேனாள் மாணவர் சங்க அறக்கட்டளை”யின் நிதியளிப்பின் வாயிலாக தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் மற்றும் புள்ளிகளைப் பெற்ற 8 மாணாக்கர்களுக்கு இப்பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணாக்கர்கள், இணையான எண்ணிக்கையில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த மாணவி உட்பட பல மாணாக்கர்கள் பட்டங்களைப் பெறும் நல்வாய்ப்புடைய விழாவாக இந்த 14-வது பட்டமளிப்பு விழா அமையுள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/the-madras-high-court-had-ordered-a-ban-on-setting-up-firecracker-shops-in-the-island/ 

தமிழ்நாடு மாநிலத்திற்கு அப்பால், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் தமிழ்க்கல்விப் பணியைத் தொடர்ந்து 40 ஆண்டுகளாக அளித்து வரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முயற்சியால், இந்தப் பட்டமளிப்பு விழாவில் இலங்கை, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுவது முக்கிய சிறப்பம்சமாகும். தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்ய வேண்டும் என்னும் கனவினை நனவாக்கும் நலவாய்ப்பினைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடர்ந்து ஆற்றி வருகின்றது.

Share This Article

Leave a Reply