அவதூறு வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி சபாநாயகர் அப்பாவு-வுக்கு சென்னை எம்பி – எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read

அவதூறு வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி சபாநாயகர் அப்பாவு-வுக்கு சென்னை எம்பி – எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும் அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏ களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்றம் சம்மன் அனுப்பியும், அதை சபாநாயகர் பெற மறுத்து விட்டதாக பாபு முருகவேல் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது

சென்னை உயர் நீதிமன்றம்

சம்மனை நிராகரிக்கவில்லை எனவும், நீதிமன்றம் தெரிவிக்கும் நாளில் ஆஜராவதாகவும் அப்பாவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்த சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் அப்பாவு-வுக்கு உத்தரவிட்டது

Share This Article

Leave a Reply