மங்கல இசையுடன் தொடங்கியது சதய விழா. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் நாளை அரசு சார்பில் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரியக் கோவிலை கட்டி உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றிய மாமன்னன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அதேபோல் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மன்னராக முடிசூடினார். பிறந்த நாளையும், முடிசூடி நாளையும் சதயவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு 1039ம் ஆண்டு சதயவிழா இன்று மங்கள இசையுடன் துவங்கியது.
தொடர்ந்து அப்பர் பேரவை சார்பில் திருமுறை முற்றுதல், கருத்தரங்கம், இசை கஞ்சேரிகள் நடைபெறுகிறது.
இன்று மாலை பழங்கால இசைக்கருவிகளோடு 1039 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இரண்டாம் நாளான நாளை காலை அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/the-city-of-tanjore-is-full-of-festivities-in-view-of-the-1039-year-sadaya-festival-of-emperor-irajaraja-cholan-who-built-the-great-temple-of-tanjore/
அதனை தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு துறை சேர்ந்த அறிஞர்ளுக்கு இராஜராஜ சோழன் விருதினை வழங்குகிறார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.