கருனாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் அடக்க செய்ய காரணம் பாமக போட்ட வழக்கை திரும்ப பெற்றதால் தான் செய்ய முடிந்ததாகவும் இல்லையெனில் வேறு எங்கையாவது கலைஞர் கருனாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் என்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தவறான தகவலை முதல்வர் சட்டமன்றத்தில் கூறியுள்ளதாக பாமக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜி கே மணி ராதாபுரம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரச்சார வாகனத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழக மக்களுக்கு கிடைத்த முக்கியமான தேர்தல் என்றும் தமிழ்நாட்டிற்கு சமூக நீதி பெற மாம்பழ சின்னத்தை வெற்றி பெறச்செய்தால் சமூக நீதி கிடைக்கும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் குடும்பம் மட்டும் தான் வளர்ச்சி பெறும் பட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் அடுத்த மாதமே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் 10.5 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக அமைச்சர்கள் பணத்தை மூட்டை மூட்டையாக கொண்டு வந்துள்ளார்கள் அதை நீங்கள் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் பிரச்சனை இல்லை மாம்பழ சின்னம் வெற்றி பெற வேண்டும். இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எப்போது எடுப்பீர்கள் என பாமக ஜி கே மணி கேள்வி எழுப்பியதற்கு தமிழக முதல்வர் தவறான தகவலை கூறியதாக அன்புமணி குற்றஞ்சாட்டினார். பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நீதிமன்றம் ரத்து செய்யதுள்ளதாக தவறான தகவலை கொடுத்துள்ளதாகவும், இடஒதுக்கீட்டில் தவறான தகவலை பீகார் மாநிலம் குறிப்பிட்டதால் அது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமூக நீதிக்கும் இப்போ உள்ள திமுகவிற்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு தரமுடியாது என தெரிவிப்பதாகவும்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக கூறி வருவதாக கூறினார். மேலும் தவறான தகவலை சட்டமன்றத்தில் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் மறுப்பு தெரிவிக்க வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தரவுகள் சேகரித்து உள் ஒதுக்கீடு கொடுங்கள் என தெரிவித்ததாகவும் இதில் முதலமைச்சர் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் தர முடியும் என கூறுவதாகவும் அமைச்சர் சிவசங்கர் எங்களிடம் தரவுகள் இருப்பதாக அமைச்சர் ஒரு மாதிரியும் முதலமைச்சர் வேறு மாதிரியான பேசுவதாக தெரிவித்தார். தேர்தல் வந்தால் மட்டுமே பாமக இடஒதுக்கீடு பற்றி பேசுவதாக திமுக குற்றஞ்சாட்டுகிறார்கள் ஆனால் கலைஞர் கருனாநிதி இருந்தால் இடஒதுக்கீட்டிற்கு தர கையெழுத்துயிட்டு இருப்பார் என்றும் மறைந்த முதல்வர் கருனாநிதி மெரினா கடற்கரையில் அடக்க செய்ய காரணம் பாமக போட்ட வழக்கை திரும்ப பெற்றதால் தான் செய்ய முடிந்தது இல்லையெனில் வேறு எங்கையாவது கலைஞர் கருனாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டிருப்பார் என அன்புமணி கூறினார்.
கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் வெட்ககேடு மரக்காணம் , செங்கல்பட்டில் நடைபெற்ற சாராய உயிரிழப்பிற்கு பிறகும் தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை
கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்பு வழக்கில் சிபி ஐ விசாரனை கொண்டு வரவேண்டும் சிபி சி ஐ டி விசாரனை மீது நம்பிக்கை இருந்தாலும் ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் அவர்கள் இருப்பார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வாக்கு சேகரிப்பின் போது இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள வந்ததால் வழி விட கூறி அன்புமணி பேச்சை நிறுத்தினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.