- திருவள்ளூர் மாவட்டம் நாலூர் கம்மவார் பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையானது கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக மாறி சேதம் அடைந்தது அதனை சீரமைக்க கூறி பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் அவ்வழியாக ஞாயிறு வழுதிகைமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்து வரும் நிலையில் அப்பகுதியில் கண்டைனர் முனையத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் செல்வதால் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகிறது.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/they-filed-a-petition-in-the-tanjore-collectors-office-to-increase-the-salary-to-10000/
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொதுமக்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் மழை நீர் பள்ளத்தில் மண்ணைக் கொட்டி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் காவல்துறையினர் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டனர் சமரசத்தை ஏற்காத பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Leave a Reply
You must be logged in to post a comment.