- நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கட்சியின் கொள்கைப் பாடல் மேடையில் இரண்டு முறை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதை தமிழக வெற்றிக் கழகத்தின் சமூகவலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலில் விஜயின் குரலும் ஒலித்ததால் தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தனர்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு, விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர். விஜயின் அரசியல் வருகை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாநாட்டு மேடைக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் வருகை புரிந்ததும் தளபதி தளபதி லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். கட்சி நிர்வாகிகள் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, மாநாட்டு மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் பாதையில் சென்று தொண்டர்கள் மத்தியில் வணக்கம் செலுத்தினார்.
ரேம்ப் வாக்கில் விஜய் நடந்து வந்து கொண்டிருந்தபோதே தொண்டர்கள் கட்சி கொடி துண்டுகளை நடிகர் விஜயை வீசி நோக்கி வீசத் தொடங்கினர். ஒவ்வொரு துண்டையும் எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்டபடி சிரித்த முகத்துடன விஜய் சென்றார். கீழே விழுந்த துண்டை எடுத்து கழுத்தில் அணிந்து கொண்டே ரேம்பில் சென்றார்.
தொடர்ந்து விஜய் மேடைக்குச் சென்றவுடன், வெற்றிக் கழகத்தின் பாடல் ஒளிபரப்பப்பட்டது. பாடல் ஒலிக்க ஒலிக்க ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் கண்கலங்கியபடி விஜய் நின்றார். தொடர்ந்து, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், ரிமோட் கண்ட்ரோல் மூலமாக தவெக கொடியை 100 அடி கம்பத்தில் ஏற்றினார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியுள்ளது. தவெகவின் உறுதி மொழியை பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்க தொண்டர்கள் அனைவரும் அதனை எழுந்து வாசித்தனர். மாநாட்டில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்த விஜய் உற்சாகமடைந்தார். முன்னதாக இந்த மாநாடு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
அப்போது கொள்கை பரப்பு பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இதோ. அறத்தோடு வாழும் குலத்தோன் இதோ.” என்று தொடங்கி, “புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் செய்வோம்.” என முடியும் பாடல் 4.22 நிமிடங்கள் ஒலித்தது. இதில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது
இந்த கொள்கை பாடலில், “திருவள்ளுவர், காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை வழிகாட்டியாக ஏற்று, சாதி மாத பாகுபாடு இல்லாத சமுத்துவ சமுதாய கொள்கை, அதாவது மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையுடன் உங்களுடன் உழைக்க நான் வருகிறேன்.” என்று விஜய் அதில் அதிகாரபூர்வமாக தன் கொள்கையை அறிவித்துள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/tvkvijay-conference-two-youths-lost-their-lives-in-two-separate-incidents/
இந்தப் பாடலை விஜய், தெருக்குரள் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல் மேடையில் இரண்டு முறை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதை தமிழக வெற்றிக் கழகத்தின் சமூகவலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.