உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்(71). சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே நேற்று காலை உயிரிழந்தார். அவரது மறைவால் தேமுதிக தொண்டர்கள், சினிமா ரசிகர்கள், திரையுலகினர் கதறி அழுது தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர். அவரது உடல் நல்லடக்கம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் இன்று மாலை நடைபெறுகிறது. தமிழ் திரையுலகம் ஏராளமான அரசியல் தலைவர்களை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜயகாந்த் தனிச்சிறப்பு மிக்கவர். திரைப்படங்களில் பேசும் வசனங்களை அவர் மக்கள் மத்தியிலும் பேசியதே இந்த சிறப்புக்கு காரணம். இந்த சூழ்நிலையில் அவர் தேமுதிக எனும் கட்சியை உருவாக்கினார். கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திலும் நுழைந்தார். சிறந்த எம்.எல்.ஏ.வாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றார். பெரிய அளவில் பலன் இல்லை. அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2020ல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விஜயகாந்த் அதில் இருந்து மீண்டார். அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் கேப்டன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் எப்போதும் எம்மக்கள், எம்மக்கள் என்று கூறுவார். தமிழ் நாட்டுக்கும், மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நிறைய நன்மைகள் செய்ய வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற வேண்டி தேமுதிக தலைவர் “விஜயகாந்த் போட்டோவாலே” தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உருவத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் மறைவுற்றார். தமிழகமே கண்ணீர் சிந்தியது. நல்ல மனிதர், சிறந்த தலைவர், அவர் மேடையில் பேசும் போது எம்மக்கள், எம்மக்கள் என் தொண்டர்கள் என கூறுவது மட்டுமல்ல, அவருக்குளுக்காகவே வாழ்ந்தவர். இன்னும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என்று கனவையும் கண்டார். தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் அவருடைய கனவை நிறைவேற்ற வேண்டி விஜயகாந்த் மனைவியான தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் உருவத்தை “விஜயகாந்த் போட்டோவாலேயே” நீர் வண்ணத்தில் தொட்டு ஐந்து நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் தேமுதிக தலைவர் “விஜயகாந்த் போட்டாவாலேயே” விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் படத்தை வரைந்தது நெகிழ்ச்சியுடன் பார்த்தார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.