மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்தப்பா பசவராஜ், இவர் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கெஞ்சம்மா. இவர் அருகில் இருக்கும் வீடுகளில், வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இவர்கள் பெங்களூர் எச்.ஆர்.பி.ஆர். லே அவுட் பகுதியில் உள்ள வாடகை வீட்டில், வசித்து வந்துள்ளனர்.

இந்த தம்பதியினருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், நேற்று கெஞ்சம்மா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் கெஞ்சம்மா கணவர் சித்தப்பா பசவராஜ் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததாகவும் அப்போது ஏற்பட்ட தகராறில், அவர் கெஞ்சம்மாவின் கழுத்தை நெறித்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. ஆனால் சித்தப்பா பசவராஜ் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளார்.
இதையடுத்து பசவராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.