கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 05 ஆம் தேதி மதம் மாற்றத்தை தடுத்ததாக பாமக பிரமுகர் திருபுவனம் ராமலிங்கம், இஸ்லாமிய அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் தலைமறைவாக உள்ள நிலையில் இந்த ஐந்து நபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை(என் ஐ ஏ) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 05 ஆம் தேதி திருபுவனத்தில் மதமாற்றம் தொடர்பாக ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பாக முதலில் திருவிடைமருதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் .
பின்னர் இந்த வழக்கு N I A அமைப்புக்கு மாற்றப்பட்டது.இச்சம்பவத்தில் இதுவரை 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் ஐந்து நபர்கள் இதுவரை தலைமறைவாக உள்ளனர்.இவர்களை NIA அலுவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, கும்பகோணம் மேலக்காவேரி பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத், வடக்கு மாங்குடியை சேர்ந்த பக்ருதீன்,திருமங்கலகுடியை சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் நபீல் ஹாசன் ஆகிய ஐந்து நபர்களை NIA அதிகாரிகள் தேடி வருகின்றனர் .
இவர்களை கண்டு பிடித்து கொடுத்தால் ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஏற்கனவே NIA அறிவித்துள்ள நிலையில்,
இன்று இந்த ஐந்து நபர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் உறவினர்கள் என மாநிலம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை தொடர்கிறது
மத மாற்ற சர்ச்சையில் திருபுவனம் இராமலிங்கம் 2019ல் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் தேடப்பட்டு வரும்ஐந்து குற்றவாளிகளில் ஒருவரான கும்பகோணம் மேலக்காவேரி ESM நகர் உள்ள அப்துல் மஜீத்தீன் வீட்டில் அவரது மனைவி நஸ்ரத் பேகம் இவர் எஸ்டிபிஐ யின் தஞ்சை மாவட்ட மகளிர் அமைப்பாளராக உள்ளார் இங்கு அவரும் அவரது தாயாரும் வசித்து வருகின்றனர் இவர் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டு மத பிரச்சாரமும் செய்து வருவதாக தெரிகிறது எனவே முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து சோதனை இடவும் தலைமறைவாக உள்ள அவரது கணவர் குறித்த விவரங்கள் அறியவும் அதிரடி சோதனை நடைபெறுகிறது சோதனையினை முன்னிட்டு கும்பகோணம் கிழக்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.