செங்கல் சூளைகள் தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் .!

1 Min Read
தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

செங்கல் சூளைகள் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் புதிதாக தொடங்கப்படும் சூளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

செங்கல் சூளைகளுக்கு இடையே ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகள் மற்றும் பழத்தோட்டங்களில் இருந்து குறைந்தது 800 மீட்டர் தொலைவில் செங்கல் சூளைகள் இயங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது.

இந்த வழிகாட்டுதல்கள் புதிதாக தொடங்கப்படும் செங்கல் சூளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்தது.

செங்கல் சூளைகள்

இதை எதிர்த்து கோவை மாவட்டம், தடாகம் பகுதியை சேர்ந்த எம்.மாணிக்கராஜ் என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் அமர்வு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2023-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அனுமதித்தால், சட்டவிரோத செங்கல் சூளைகள் எந்த கண்காணிப்பும் இன்றி இயங்க வழிவகுக்கும் எனக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/increasing-robbery-activities-at-thanjavur-bypass-road-motorists-seeks-additional-police-security/

மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வழிகாட்டுதல் குறித்த அறிவிக்கையின்படி செங்கல் சூளைகள் இயக்கம் தொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article

Leave a Reply