- நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் தனது வீட்டை அகற்றுவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நீர்வளத் துறையின் உதவி பொறியாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனியாண்டி நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் தனது வீட்டை அகற்றுவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நீர்வளத் துறையின் உதவி பொறியாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு மாற்று ஏற்பாடுகளை செய்துதர உத்தரவிடக்கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, ” மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் சர்வே எண் நீர்நிலைப் பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மனுதாரர் சம்பந்தப்பட்ட சர்வே எண்ணில் அரசு கட்டிடம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். தனியார் கட்டிடங்களை இலக்காகக் கொண்டு எதுவும் செய்வதில்லை. நீர்நிலைப் பகுதியாக இருப்பின் அதில் எவ்விதமான கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் அரசு கட்டிடங்களும் உள்ளன என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.
மனுதாரர் மாற்று ஏற்பாடுகளை செய்ய 4 மாத கால அவகாசம் கோருகிறார்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/the-madras-high-court-has-stayed-the-order-issued-by-the-state-human-rights-commission-to-take-disciplinary-action-against-assistant-commissioner-of-police-llangovan/
ஏதேனும் தொடர்புடைய திட்டங்கள் இருப்பின் மனுதாரர் மாற்று வசதி கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மனுதாரரின் மனுவை பரிசீலித்து, அவர் தகுதியுடையவராக இருப்பின், 8 வாரங்களுக்குள்ளாக அது தொடர்பான முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



Leave a Reply
You must be logged in to post a comment.