- காவல் உதவி ஆணையர் இளங்கோவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில மனித உரிமைகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவொற்றியூர் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் உதவி கமிஷனர் இளங்கோவன், தலைமையில் போலீசார், அங்கு வசிக்கும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து , ஒழுக்கமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் என்கவுண்டர் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறிய காட்சிகள் யூடியூப் ஒன்றில் வெளியானது.இந்த காட்சிகளின் அடிப்படையில், தானாக முன்வந்து வழக்காக எடுத்து, மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார், உறுப்பினர் கண்ணதாசன் அமர்வு விசாரணை நடத்தியது.அப்போது ஆஜரான உதவி ஆணையர் இளங்கோவன் ஆஜராகியிருந்தார்.

இதனையடுத்த, இளங்கோவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு கடந்த ஏழாம் தேதி ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இளங்கோவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படுள்ளது. அதில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பின்பற்றப்படும் வழக்கமான நடை முறையே பின்பற்றப்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து உரிய விளக்கம் அளிக்க தனக்கு வாய்ப்பு அளிக்காமல் தனக்கெதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/income-tax-order-canceling-the-registration-of-education-trust-filed-a-case-against-this-in-madras-high-court/
மனு நீதிபதிகள் பி.பி. பாலாஜி, ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சினேஹா, ஆணையம் முன் ஆஜராகி மன்னிப்புக்கேட்ட பின்னரும் துறை ரீதியான நடவடிக்கை உத்தரவிட்டுள்ளதாகவும் எனவே, ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் வாதிட்டார்.இதனையடுத்து , இளங்கோவன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள் மனு குறித்து ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.