- மாநாகராட்சி கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் தாக்கல் செய்த மனு குறித்து கோவை மேயர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாமன்ற கூட்டம் கடந்த 13ம் தேதி மேயர் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 47வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரனை அடுத்த மூன்று கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பிரபாகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தான் எந்த தவறும் செய்யாத நிலையில் விதிகளை பின்பற்றாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மனுவில் கூறியுள்ளார்.
எனவே சஸ்பெண்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், கோவை மாநகர மேயர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.