நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் வளர்ப்பு வீட்டு நாயை சிறுத்தை வேட்டையாடி செல்லும் சிசிடிவி கேமரா பதிவு சமுக இணையதளத்தில் வைரலாகி குடியிருப்பு வாசிகளை அச்சமடைய செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்துலூர் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு காட்டு யானை, கரடி,காட்டு மாடு,சிறுத்தை,புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.இந்த நிலையில் பந்துலூர் இந்திரா நகர்,எம்.ஜி.ஆர் நகர்,நத்தம்,ரிச்மண்ட் உள்ளிட்ட பகுதியில் சமீப காலமாக சிறுத்தை ஒன்று நடமாட்டம் காணப்பட்டது.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு பிராணியான வீட்டு நாயை வேட்டையாடி சென்றுள்ளது.மேலும் நத்தம் பகுதியில் உள்ள வசிக்கும் குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் நுழைந்த சிறுத்தை வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாயை வேட்டையாடி வாயில் இழுத்து சென்றுள்ளது.

பின்னர் இந்த காட்சி குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில்,இந்த காட்சி தற்போது சமுக இணையதளத்தில் வைரலாகி குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.