மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கூடுதல் ஆவணங்கள் வழங்க கோரி மனு மீதான விசாரணை வரும் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், அருகே உள்ள பெரியநெசலூரை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி வயது 17. இவள் கள்ளக்குறிச்சி மாவட்டம், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கிருத்திகா ஆகியோரே கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து, அந்த ஆசிரியர்கள் ஹரிப்பிரியா மற்றும் கீர்த்திகாவை வழக்கிலிருந்து நீக்கியிருந்தனர். இது தொடர்பாக மாணவி தரப்பில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதற்கு நீதிமன்றத்தில் ஆஜராகிய மாணவியின் தாய் செல்வி கேட்ட குற்ற பத்திரிக்கை நகல் ஆவணங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் ஆட்சேபனை தெரிவிக்க போதியகால அவகாசம் கேட்ட நிலையில், மேலும் குற்ற பத்திரிகையில் விடுபட்ட வழக்கு ஆவணங்கள் பள்ளி வளாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கை நகலை வழங்க கோரி 2 வது முறையாக செல்வி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு சி.பி.சி.ஐ.டி போலிசாரும் பதிலுக்கு பதிலாக மனு தாக்கல் செய்த நிலையில், நேற்று இவ்வழக்கு விசாரணை மீண்டும் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வந்தது.

அப்போது செல்வி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்களுக்கு விடுபட்ட கூடுதல் ஆவணங்களை வழங்க கோரி வாதிட்டனர். இதனை கேட்ட நீதிபதி சி.பி.சி.ஐ.டி தரப்பில் வாதத்தை தெரிவிக்க வரும் டிசம்பர் 1 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.