- குப்பை குளங்கள் நிறைந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர், கழிவறை இல்லாமல் தவிக்கும் பொது மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம். இந்த வட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ் 61 ஊராட்சிகள் அடங்கும். அதேபோல் இந்த அலுவலகத்தில் ஈ சேவை மையம் கருவுலகம் உள்ளிட்ட கூடுதல் அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில 61 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களின் நில ஆவணங்களின் குறைபாடுகள் குறித்தும், ஓ ஏ பி, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, நிவாரண உதவிகள் குறித்தும் அன்றாடம் வந்து செல்கின்றனர். அதேபோல் இ சேவை குறித்தும், கருவுலகம் தொடர்பாகவும் இந்த அலுவலகத்தை நாடுகின்றனர்.
ஆனால் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இந்த அலுவலகத்தில் பல லட்ச ரூபாயில் கட்டப்பட்ட கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவை பராமரிப்பில்லாமல் குப்பை கழிவுகளால் மூடப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தை சுற்றி பராமரிப்பில்லாமலும் கழிவு பொருட்கள் ஆங்காங்கே குவியல் குவியிலாகவும காணப்படுகிறது. இது குறித்து வட்டாட்சியரிடம் பலமுறை புகார் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையியே நீடித்து வருவது. அலுவலக குறைபாடுகளையே சரி செய்ய முடியாத பட்டாச்சியர் அலுவலக அதிகாரிகளால் பொதுமக்கள் குறைபாடுகளை எவ்வாறு சரி செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அலுவலகம் வரும் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.