திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஆத்து மேடு பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே பேருந்தை இயக்கிய டிரைவர். மூதாட்டி தவறி கீழே விழுந்ததால் உறவினர் வாக்குவாதம். அந்த சம்பவம் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. அப்பகுதி பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்து மேடு பேருந்து நிறுத்தத்தில் லட்சுமணன் பட்டி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற மூதாட்டி என்பவர், திண்டுக்கல் செல்லும் அரசு பேருந்தில் ஏறிக்கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை நிறுத்துவதற்கு விசில் அடித்தும் ஓட்டுநர் கவனிக்காமல் பேருந்து இயக்கினார்.

இதில் மூதாட்டி பழனியம்மாள் என்பவர், திடிரென்று ஏறுவதற்கு முன்பாகவே பேருந்தை இயக்கிய டிரைவர் மூதாட்டி பழனியம்மாள் தவறி கீழே விழுந்தார். மூதாட்டி பழனியம்மாள் கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. மேலும் கீழே விழுந்த மூதாட்டியின் காயங்கள் கண்ட முதாட்டியுடன் கூட வந்த உறவினர் அரசு பேருந்து ஓட்டுனரிடம் சென்று கவனிக்காமல் பேருந்தை எடுக்குறியே உயிர் போனா யார்யா பொறுப்பு என்று வெகு நேரமாக கடுமையான வாக்கு வாதத்தில் மூதாட்டி உறவினர்கள் ஈடுபட்டனர்.

பின்பு அங்கிருந்த ஆட்டோவில் ஏறி உறவினர் மருத்துவமனைக்கு மூதாட்டியரை அழைத்துச் சென்றனர். இதனால் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்து மேடு பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் அரை மணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.