- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கவரைப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் தீர்மானம்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.முதல் நிகழ்வாக மறைந்த தலைவர்களின் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து ஒன்றிய செயலாளர் கி.வே. ஆனந்தகுமார் சிறப்பு தீர்மானங்களை கொண்டு வந்தார்.அதில்
இந்திய அரசில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவரும் அரை நூற்றாண்டில் பல குடியரசு தலைவர்களையும் பிரதமர்களையும் உருவாக்கி அரசியல்சாணக்கியருமான
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்கிட கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தீர்மானம் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் மாவட்ட கழகத்தின் அனுமதியுடன் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு தனது சொந்த செலவில் திருவுருவ சிலை அமைக்க தயாராக இருப்பதாக ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ பேசுகையில் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் யாரும் கேட்கவில்லை, ஆனால் நமது முதலமைச்சர் மகளீருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தையும் மகளீர் உரிமைத்தொகை திட்டத்தையும் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.