தமிழக பாடதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார். மழை வெள்ள பாதிப்பை தொடர்ந்து கடந்த சில நாட்களாக யாத்திரை நடைபெறவில்லை. மீண்டும் தனது யாத்திரையை தொடங்கினார் பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழகத்தில் என் மண் என் மக்கள் என்ற நடைபயண யாத்திரையை 78 வது நாளாக நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து 79 ஆவது நாளாக இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் தனது பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் முன்னதாக மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது;-

பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. பி.எம். கிசான் திட்டத்தில் ஆறு லட்சம் விவசாயிகளை பல்வேறு காரணங்கள் கூறி தமிழ்நாடு அரசு திட்டத்திலிருந்து நீக்கி உள்ளது. மத்திய அரசு திட்டங்களாக இருந்தாலும், இவற்றை மாநில அரசு உதவியுடன் தான் செயல்படுத்த வேண்டியுள்ளது. இதனை தமிழக அரசு தலைகீழாக நின்று தடுப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறது. மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு தலைகீழ நின்று தடுத்து வருகிறது.
இதனால் 100 நாள் திட்டத்திற்கான நிதி பாக்கியதும் மத்திய அரசு வழங்க வேண்டியது இல்லை அனைத்தையும் வழங்கி விட்டது. இதனால் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து விவசாயிகளும் பிரச்சனை இன்றி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனால் சர்வே செய்யும் வட்டாட்சியர்கள சரியான ரிப்போர்ட் அளிக்காத பட்சத்தில் காப்பீடு தொகை வழங்குவதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை கவனத்தில் எடுத்து சரி செய்து தர நடவடிக்கை எடுப்போம்.

தற்போது ஐநா சபை உலகத்தின் தன்மையை ரிப்ளை பண்ணாமல் பழைய ஓல்ட் மெம்பர் கிளப் போன்று செயல்பட்டு வருகிறது. தற்போது ஐநா சபையில் ரீபார்ம் நடைபெற வேண்டுமென எண்ணுகிறோம். அவ்வாறு நடக்கும் சமயத்தில் மோடி அவர்களின் காலத்தில் ஐநாவில் நிரந்தர மெம்பராக நிச்சயம் இணைவோம் என தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.